கட்சிகள், சின்னங்களை மாற்றுவதன் ஊடாக மக்களை ஏமாற்ற முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க புதிய நாடகம் ஒன்றுக்குத் தயாராவதாகவும் தெரிவிக்கிறார் பவித்ரா வன்னியாராச்சி.
தேசிய ஜனநாயக முன்னணியெனும் பெயரில் புதிய நாடகம் போடத் தயாராகும் ரணில் இவ்வாறே 2015ல் அன்னப் பறவையைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தார். ஆனாலும் நாட்டுக்கு நன்மையெதுவும் நடக்கவில்லையென பவித்ரா மேலும் தெரிவிக்கிறார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த பவித்ரா, தலைவலிக்கு தலையணையை மாற்றிப் பிரயோசனமில்லையென விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment