இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் அனைவரையும் பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.
இலங்கை கிரிக்கட்டின் தரம் குறைந்துள்ளதுடன் விளையாட்டு வீரர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஒத்துழைப்பு நிர்வாக மட்டத்தில் இல்லாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அண்மைய உலகக் கோப்பை சுற்றுப் போட்டியில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றத்தைக் காணாத தேசிய அணி பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment