மோசமான நிலை நீடித்தால் ஐ.நா. செல்வோம்: ரிசாத் - sonakar.com

Post Top Ad

Sunday, 7 July 2019

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா. செல்வோம்: ரிசாத்


முஸ்லிம் இனத்திற்கு எதிராக மிகமோசமான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதனால் தொடர்ந்தும் பொறுமைகாக்க முடியாத காரணத்தினால் எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். அதனைத்தவிர எமக்கு வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. இந்நிலையில் ஐ.நாவுக்கு இவ்விடயங்களைக் கொண்டு செல்ல நேரிடும் என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ரிசாத்.


இது தொடர்பில் மேலும் விளக்கமளித்துள்ள அவர்,  ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. ஐ.நாவின் உறுப்பு நாடாக இலங்கையும் உள்ளது. அவ்வாறிருக்க, குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-RB

No comments:

Post a Comment