ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஏப்ரல் 22ம் திகதி அமுலுக்கு வந்த அவசர கால சட்டம் நான்காவது தடவையாகவும் நீடிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரிகள் அவர்களோடு தொடர்பு பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு இயக்கம் முடக்கப்பட்டு விட்டதாக அரசு தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் ஓகஸ்ட் 22ம் திகதி வரை இவ்வாறு அவசர கால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
அவசர கால சட்டத்தின் பின்னணியில் வகைதொகையின்றி கைதுகளும் சோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment