முஸ்லிம் சமூக விவகாரங்கள், வழிபாடு மற்றும் கொள்கை நிலைப்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பௌத்த துறவிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்று நேற்று கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன ஏற்பாட்டில் வெள்ளவத்தையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிங்களத்தில் சரளமாக பேசக்கூடிய அம்ஹர் மௌலவி கலந்து கொண்டு விளக்கங்களையளித்ததோடு பல்வேறு கேள்விகளுக்கும் பதில் வழங்கியிருந்தார்.
இங்கு உரையாற்றிய கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபா் சம்பிக்க சிறிவர்தன, இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ச்சியாக அவசியப்படுவதாகவும், தான் புத்தளத்தில் கடமையாற்றிய போது அங்கு இனங்களிடையேயான பிணக்குகளை தீர்த்து வைக்க சகல இனத்தவரும் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்திருந்ததாகவும் கொழும்பிலும் அவ்வாறான அவசியமிருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-அஸ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment