இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகம் என்பதை உணர்ந்து வாழ வேண்டியதை முஸ்லிம் லீக் செயலாளர் இந்நாட்டின் முஸ்லிம்களுக்கு சொல்லியுணர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் மல்வத்து பீட மகாநாயக்கர் சுமங்கல தேரர்.
மேல் மாகாண ஆளுனர் முசம்மிலின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள வருகை தந்திருந்த உலக முஸ்லிம் சம்மேளனத்தின் செயலாளர் நாயகமும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கத் தலைவருமான கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா மரியாதை நிமித்தம் மல்வத்து மகாநாயக்கரை சந்திக்கச் சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் மகாநாயக்கருக்கு அப்துல் கரீம் ஈஸா கை கொடுக்க முனைந்த போதிலும் அதனை மகாநாயக்கர் தவிர்த்துக் கொண்டுள்ளமையும் வழமையாக மகாநாயக்கர்கள் தம் முன்னிலையில் மற்றவர்கள் சிரம் தாழ்த்தி கும்பிடுவதையே எதிர்பார்க்கின்றமையும் ஆளுனர் முசம்மில் அவ்வாறே மரியாதை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment