கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதாக, சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில், நீக்கப்பட்ட ரம்புட்டான் பழங்களின் தோல்களே இதற்குக் காரணமாக மாறியுள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரம்புட்டான் பழங்களை உட்கொள்ளும் பலர், அதன் தோல்களை வீதியில் வீசிவிட்டுச் செல்வதனை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தோல்களில் தேங்கும் நீரில், டெங்கு நுளம்பு முட்டையிடுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக, ரம்புட்டான் பழங்களின் தோல்களை உரிய முறையில் சேகரித்து, கழிவுப்பொருட்களுடன் சேர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம், டெங்கு நோயின் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment