அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை(31) விசேட தகவல் ஒன்றினை அடுத்து அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொலித்தீன் ஒன்றில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளை மீட்டனர்.
குறித்த கைக்குண்டுகள் யாவுமு; ஆற்றங்கரையோரம் பொலித்தீன் பை ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டதுடன் இக்குண்டுகளை சிறுவர்கள் கைக்குண்டுகள் என அறியாமல் எடுத்து விளையாடியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற கிராமவாசி மற்றும் பொதுமக்கள் இணைந்து சவளக்கடை பொலிசார் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிசார் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதுடன் இராணுவத்தினரும் வெடி குண்டு செயலிழக்கும் படையினரும் சம்பவ இடத்தில் செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment