ஈஸ்டர் தாக்குதல்களைத் தவிர்க்க முடியாமல் போனமைக்கு அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினர் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும் என்கின்ற போதிலும் அரசை நீக்குவது அதற்குத் தீர்வாகாது என தெரிவித்துள்ளார் சம்பிக்க ரணவக்க.
நேற்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டே இவ்வாறு தெரிவித்த அவர், நாட்டில் இருக்கும் தீவிரவாததத்தைக் கட்டுப்படுத்த தேசிய அளவிலான செயற்பாடு அவசியப்படுவதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் ஷரியா சட்டம் கடைப்பிடிக்கப்படல் மற்றும் மத்ரசா விவகாரங்களைக் கவனிக்க புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment