ஒரு தவறைக் களைய வேண்டும் எனும் உண்மையான நோக்கம் இருந்தால் அந்தத் தவறை செய்ய வழி செய்து விட்டு, மக்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை விட தவறுகள் நடைபெறாமல் சட்டத்தை அமுல் படுத்துவதே நாட்டின் நிர்வாகத்துக்கு அழகு என தெரிவிக்கிறார் மரண தண்டனை அமுல் படுத்தப்படுவதற்கு எதிரான தனி நபர் பிரேரணையை நாடாளுமன்றில் முன் வைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட.
மரண தண்டனைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படின் அது நாட்டின் சோக தினமாக அமையும் என ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக்கே பண்டாரிகொட இவ்வாறு பதிலளித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மேற்கு நாடுகள் இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment