ஈஸ்டர் தாக்குதல் பற்றிய இறுதி அறிக்கை வெளியிடப்படாது விடின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் தாம் சந்திக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
மூன்று மாதங்களாகியும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கான நீதி இன்னும் வழங்கப்படாத நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் என்னை சந்திக்க வரத் தேவையில்லையென இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் எதிர்க்கட்சிகளும் அக்கறையின்றி இருப்பதாக அவர் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment