கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து மீளாய்வு மனு தாக்கல் செய்துள்ளார் சட்டமா அதிபர்.
ஈஸ்டர் தாக்குதலை தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கத்தவறியதன் பின்னணியில் குறித்த இருவரையும் சந்தேக நபர்களாக அறிவித்து கைதும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இருவருக்கும் பிணை வழங்கப்பட்டமையை எதிர்த்து சட்டமா அதிபர் இவ்வாறு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இவ்விருவருக்கும் வழங்கப்பட்ட பிணை சட்ட விரோதமானது என சட்டமா அதிபர் தனது மனுவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment