கடந்த வருடம் ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியல் பிரளயத்தின் போது நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்ததன் ஊடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட விவகாரத்தின் பின்னணியில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வ்வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 2ம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் ரஞ்சன் ராமநாயக்க இது தொடர்பில் மன்னிப்பு கோர விரும்புவதாகவும் அவர் நீதித்துறைக்கு இடையூறு செய்ய வேண்டும் எனும் நோக்கில் எதுவும் கூறவில்லையெனவும் அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மன்றில் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக 27 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment