இந்நாட்டின் தலைவர்களுக்கு முதுகெலும்பில்லையென கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்த நிலையில் தனக்கு முதுகெலும்பிருப்பதை 2015 ஜனவரியும் 2018 ஒக்டோபரிலும் நிரூபித்த ஒரே தலைவன் தானே என தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.
ஜே.ஆர். ஜெயவர்தனவுக்குப் பின் தைரியமான முடிவுகளை எடுக்கும் ஒரே ஜனாதிபதி தானே எனவும் வேறு யாராவது அவ்வாறு இருந்திருக்கிறார்களா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தனது பதவிக்காலத்தின் போது சக்தி வாய்ந்த தனி மனிதர்கள், பாதாள உலகத்தினர், தனியார் நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாது செயற்பட்டமையை யாரும் மறக்கக் கூடாது எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment