16 வருட காலமாக தனது திறமையின் மூலம் மாத்திரம் இலங்கை தேசிய அணியில் பங்கெடுத்து விளையாடி வந்த நிலையில் எதிர்வரும் 26ம் திகதி பங்களதேஷுடன் இடம்பெறும் ஒரு நாள் போட்டியோடு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் லசித் மலிங்க.
தனது ரசிகர்கள் அனைவரையும் அன்றைய தினம் போட்டியைப் பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்துள்ள அவர், இது தொடர்பில் தான் ஏலவே ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் 26ம் திகதிக்குப் பின் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தன்னைப் பார்க்க முடியாது எனவும் மலிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தெரிவாளர்கள் குழறுபடி தொடர்பில் முரளி, மஹேல, சங்கக்கார உட்பட முக்கிய சிரேஷ்ட வீரர்களும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment