தனது பதவிக்காலத்தைப் பற்றி மீண்டும் உச்ச நீதிமன்றிடம் கேள்வியெழுப்ப மைத்ரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ள முயற்சி எதுவித பலனையும் தரப் போவதில்லையென தெரிவிக்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.
ஏற்கனவே, இச்செயற்பாட்டை மஹிந்த அணியினர் விமர்சித்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை மீண்டும் உச்ச நீதிமன்றுக்குக் கொண்டு செல்வதன் மூலம் மைத்ரி குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஏலவே வழங்கப்பட்ட தீர்ப்பில் மாற்றமிருக்கப் போவதில்லையென்பது அவரது கருத்தாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment