ரிசாத் பதியுதீன் அல்லது தம்மால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டால் புதிய சர்ச்சைகள் வெடிக்கும் என தெரிவிக்கிறார் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.
ரிசாத் பதியுதீன் அமைச்சரானால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கட்டாயம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கும் ரதன தேரர், மருத்துவர் ஷாபி விடயத்திலும் எதிர் தரப்பை வழி நடாத்திச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்சயம் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரிக்க வேண்டியது பாதுகாப்பு தரப்பின் பொறுப்பு எனவும் அதனை மீறி பதவி வழங்கல் இடம்பெற்றால் நாடாளுமன்றில் ரிசாதுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் எனவும் ரதன தேரர் தெரிவிக்கின்றமையும் ஏலவே முறைப்பாடுகளைப் பெற நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் குழு ரிசாத் பதியுதீனுக்கு எதிராக தீவிரவாதத்துடன் தொடர்புடைய எந்த முறைப்பாடும் வரவில்லையென தெளிவுபடுத்தியிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment