மஹிந்த ராஜபக்சவால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் கோட்டாபே ராஜபக்சவை முன் நிறுத்தி அவரது தயவில் கட்சியை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் கம்மன்பில, கோட்டாபே தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டு விட்டதாக தெரிவிக்கிறார்.
இவ்வருடம் மே மாதமே அதற்கான இறுதி ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுவிட்டதாக கம்மன்பில தெரிவிக்கிறார்.
எனினும், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலேயே தான் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடப் போவதாக முன்னதாக கோட்டாபே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment