மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தின் பின்னணியிலான வழக்கில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவரது சகாக்கள் எண்மருக்குப் பிணை வழங்கியுள்ளது நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம்.
நீதிமன்றில் ஆஜரான ஏனைய 08 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அவர்களை 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 25 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
அதேநேரம் பிரதிவாதிகளுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment