முசம்மில் போன்ற முஸ்லிம்களோடு கோபமில்லை: விமல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 4 July 2019

முசம்மில் போன்ற முஸ்லிம்களோடு கோபமில்லை: விமல்!


தனது சகா முசம்மில் போன்ற முஸ்லிம்களோடு தனக்கு எவ்வித கோபமும், குரோதமும் இல்லையென தெரிவிக்கிறார் தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவன்ச.



கார்ட் விளையாடுவது போன்ற செயல்களுக்கெல்லாம் கிழக்கு பகுதிகளில் ஷரீயா சட்டத்தின் பிரகாரம் கல்லெறிந்து கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கின்ற விமல், இந்நாட்டை அடிப்படைவாதத்தின் பால் இழுத்துச் செல்வதை அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார்.

நாட்டின் பாரம்பரிய (சூபி) முஸ்லிம் சமூகமும் அடிப்படைவாதத்துக்கு எதிராகவே செயற்படுவதாகவும் தெரிவிக்கின்ற விமல், இவ்வாறான தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து நாட்டில் வஹாபிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முன் வரவேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment