ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை சந்தேக நபர்களாக அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபரிடமிருந்து இவ்வறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இப்பின்னணியில் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment