சமயங்களின் பேரில் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மிருக வதைகளை நிறுத்துவதற்கு நாடாளுமன்றில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறார் ஒமல்பே சோபித தேரர்.
மிருகங்களை மனிதர்கள் எவ்வாறு வேண்டுமானாலும் வதைக்கலாம் என எண்ணுகிறார்கள். மிருகங்களுக்கு உணர்வே இல்லையென்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. அவ்வாறின்றி மிருகங்களின் உணர்வுகளையும் பாதுகாக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்து சமயங்களின் பேரில் நடாத்தப்படும் மிருக வதைகளை நிறுத்த வேண்டும் என அவர் தெரிவிக்கிறார்.
ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கி வரும் நிலையில் ஹெல உறுமயவின் ஒமல்பே சோபித இவ்விவகாரம் பற்றி பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment