மேல் மாகாண ஆளுனர் முசம்மிலின் ஏற்பாட்டில், உலக முஸ்லிம் சம்மேளனத்தின் செயலாளர் நாயகமும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கத் தலைவருமான கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச, உட்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்ட இன்று (30) தாமரை தடாகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அங்கு அனுமதியின்றி மேடையேறி ஒமல்பே சோபித தேரர் அடாவடித்தனம் புரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தேரர் மேடையில் பேசுவதற்கான நிகழ்ச்சி நிரல் இருக்கவில்லையாயினும் அங்கு ஏறிய அவர், அல்-குர்ஆன் வசனம் ஒன்றின் ஆங்கில மொழி பெயர்ப்பொன்றை கூகிளிலிருந்து பெற்று அதனை அடிப்படையாக வைத்து மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்துக்கு வராவிட்டால் கொல்லப்பட வேண்டும் என தெரிவிப்பது பற்றி தனக்கு விளக்கம் வேண்டும் எனவும் ஏனைய மதத்தினர் இலங்கையில் ஐக்கியமாக வாழ்கின்ற போதிலும் முஸ்லிம்கள் மாத்திரமே அந்நியப்பட்டு வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே உணவு, உடை மற்றும் கல்வியிலும் தனித்து நிற்பதாகவும் இதன் ஊடாக நாளடைவில் தனி நாடு கோரிவிடுவார்களோ என்ற அச்சம் உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்த நிலையில் குறித்த தேரருக்கு அல்-குர்ஆனுக்கு விளக்கம் தேவையெனில் தாம் அதற்கான ஏற்பாட்டை செய்யத் தயாராக இருப்பதாக அங்கு உரையாற்றிய ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்திருந்தார்.
அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் தேரர் நடந்து கொண்ட போதிலும் முஸ்லிம் லீக் சார்பில் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-அஸ்ரப் ஏ சமத்
-அஸ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment