மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்து, தனது கொள்கைகளை அங்கீகரித்து நாட்டின் ஜனாதிபதியாக்கினால் இதுவரை நாடு கண்டிராத வித்தியாசமான ஜனாதிபதியாக தான் பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஐக்கிய தேசியக் கட்சியன் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளதுடன் கட்சி மட்டத்திலும் மங்கள உட்பட முக்கிய பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனினும், வாரிசு அரசியலை கட்சி அங்கீகரிக்காது என தெரிவித்து சஜித்துக்குப் பதிலாக கரு ஜயசூரியவே நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதேவேளை ரவி கருணாநாயக்க பகிரங்கமாகவே இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன் தகுந்த வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
Though karu is good he is old and we don't nee old people to lead a country where there is no transparency etc.in a developed country that is okay...
Post a Comment