எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கரு ஜயசூரியவை பொது வேட்பாளராகக் களமிறக்க ரணில், சஜித், மற்றும் மைத்ரிபால சிறிசேன ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது அகில இலங்கை பிக்குகள் சங்கம்.
தற்சமயம் நாடு இருக்கும் சூழலில் கரு ஜயசூரியவே தகுதியுள்ள வேட்பாளர் என தெரிவிக்கின்ற அவ்வமைப்பு அவருக்கு ஏனையோர் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கரு ஜயசூரிய தயங்காது முன் வர வேண்டும் எனவும் கோரியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்குவதற்கு மங்கள சமரவீர பகிரங்க ஆதரவு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment