புத்த தர்மத்தைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் உலகெங்கும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய இலங்கையின் பௌத்த துறவிகளுக்கு ஆங்கிலம் கற்பித்து அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம், டச்சு போன்ற முக்கிய உலக மொழிகளைக் கற்றுக்கொண்டு தேரவாத பௌத்தத்தை உலகறியச் செய்யும் பணியில் இலங்கையின் பௌத்த துறவிகளை தயார் படுத்த வேண்டும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் பௌத்தம் அழிந்து வருவதாகக் கூறி முஸ்லிம்கள் மீதான இன வன்முறை மற்றும் ஒடுக்கு முறை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment