மற்றவர்களைப் போன்று பேச்சோடு நிறுத்திக் கொள்ளாத செயல்வீரன் தனது கணவன் என புகழாரம் சூட்டி, சஜித்துக்கு ஆதரவு தேடும் பிரச்சாரங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் அவரது மனைவி ஜலனி பிரேமதாச.
ஹற்றனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், உங்கள் எதிர்கால தலைவன் சஜித்தின் மனைவியாகவே இங்கு வந்திருக்கிறேன் என தெரிவித்ததுடன், சஜித் ஒரு திறமையான செயல் வீரன் எனவும் பேச்சோடு நிறுத்திக்கொள்ள மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை கட்சிக்குள் பாரிய எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment