முஸ்லிம்கள் வைத்தியசாலை, வியாபார நடவடிக்கை மற்றும் ஏனைய விடயங்களுக்கு போகும் நேரத்தில் ஏதோவொரு அடிப்படையில் பேசுவதும், சந்தேக கண்ணோடு பார்ப்பதுமாக இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் இருந்து சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தெரிவானவர்களுக்கான உரித்துப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு மீராவோடை அமீர் அலி மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவ்வாறான சவால்கள் வந்தாலும் எங்களது சமுதாயத்தை எல்லா வகையிலும் அவர்களை வலுவூட்டுவது எங்களது கடமையாகும். இப்போது பொருளாதார ரீதியாக மாத்திரமல்ல. பொருளாதார ரீதியாக இருந்தவர்களின் பொருள் எல்லாவற்றுக்கும் எந்தவிதமாக உத்தரவாதமும் இல்லை. உடமைகள், உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை.
நாங்கள் தலை நிமிர்ந்து கௌரவமாக பல இடங்களுக்கு செல்கின்ற நேரத்தில், வியாபாரங்களை மேற்கொள்ளும் போது, வைத்தியசாலை மற்றும் ஏனைய விடயங்களுக்கு போகும் நேரத்தில் எங்களை ஏதோவொரு அடிப்படையில் பேசுவதும், சந்தேக கண்ணோடு பார்ப்பதுமாக இருக்கின்றது.
அண்மையில் வைத்தியசாலை ஒன்றில் பிள்ளை பிறந்துள்ளதை பார்ப்பதற்கு அவருடைய மாமனார் போகும் போது தாதியர் ஒருவர் கூறினார். இன்னுமொரு சஹ்ரான் பிறந்துள்ளான் என்று. இவ்வாறு சொல்லுகின்ற அளவுக்கு எமது நிலைமை உள்ளது. இவ்வாறு முகங்கொடுக்கக் கூடிய நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.
இந்த நிலைமைகள் மாறும், இதனை சீர் செய்ய வேண்டும், பல சவால்கள் வந்த நேரத்திலும், பல பொய்களை கூறி, வைத்தியர்களை கூட வீணாக பழி சுமத்திய நிலைமைகள் எல்லாம் மாறி உண்மைகள் வெளிக்கின்றது.
உங்களது பிரதிநிதிகளாக எங்கெல்லாம் உங்களது குரல்களை, பிரச்சனைகளை எந்த அடிப்பiயில் முகங்கொடுக்க வெண்டுமோ அந்த கடமையை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பதவிகளையும் துரந்து மக்கள் பிரதிநிதிகளாக வந்திருக்கின்றோமே தவிர அரசாங்கம் தந்த அமைச்சு பதவிகளை எல்லாம் நாங்கள் துரந்து விட்டு அரசாங்கத்திற்கு இவ்வாறான விடயங்களை செய்தாக வேண்டும் என்ற அடிப்படையில் எங்களது மூச்சாக ஒவ்வொன்றாக நடக்கக் கூடிய நிலைமைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment