நீதிமன்றம் ஊடாக தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கு மைத்ரிபால சிறிசேன முயற்சி செய்து கொண்டிருப்பதாக பெரமுன தரப்பிலிருந்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
தனது பதவிக்காலம் பற்றி உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயம் அறிவதற்கான முயற்சியொன்றை மைத்ரிபால சிறிசேன அடுத்த வாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தேவையற்ற செயற்பாடு எனவும் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவிக்கிறார்.
2015ல் பதவியேற்ற மைத்ரி, தொடர்ந்தும் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான முயற்சியையே மேற்கொண்டு வருவதாக நா.உ பியல் நிசந்தவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment