நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முதுகில் குத்துவதாக விசனம் வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.
கையில் இரத்தக்கறை படியாத ஒருவரையே சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்ட கருத்தினை திரிபு படுத்தி அதனூடாக கட்சிக்கு முதுகில் குத்தும் நடவடிக்கைகளில் டிலான் ஈடுபடுவதாக தயாசிறி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக கட்சியாதரவாளர்களின் மனம் நோகும்படி கருத்து வெளியிட்டு வருவதை டிலான் நிறுத்த வேண்டும் எனவும் தயாசிறி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment