பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரையும் அச்சுறுத்தி தமக்கேற்றவாறு தமது பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு ஏதுவாக அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கும் அத்துராலியே ரதன தேரரை கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.
குருநாகல் நீதிமன்ற வளாகம் முன்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரை ரதன தேரர் நிர்ப்பந்திக்க முயலும் காணொளி பதிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அசாத் சாலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அத்துராலியே ரதன தேரர் நேற்றைய தினம் மருத்துவர் ஷாபி வழக்கின் போது ஒதுங்கியிருக்க ஆனந்த தேரர் குரல் முன்னரங்கில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment