மஹிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்திருந்தால் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காது என தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.
2015ல் மஹிந்த அரசு அமைந்திருந்தால் சஹ்ரான் போன்றவர்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கும் அவர், மஹிந்த ஆட்சியில் பாதுகாப்புத் துறை சீராக இயங்கியிருக்கும் எனவும் தெரிவிக்கிறார்.
ஹோமகமயில் இடம்பெற்ற கட்சி நிகழ்வொன்றில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை, ஈஸ்டரின் பின்னான வன்முறைகளில் பெரமுன மற்றும் தோழமை கட்சிகளின் முக்கியஸ்தர்களே இருப்பதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment