முஸ்லிம் விவாக-விவாகரத்து சட்டம் தொடர்பிலான சீர்திருத்தங்கள் ஒன்பது வருட காலத்திற்குப் பின் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அதனை நீதியமைசசரிடம் நாளை (15) ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் சிரேஷ்ட அரசியல்வாதியான ஏ.எச்.எம். பௌசி.
அவரது தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து உரையாடிய நிலையில் இறுதி நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சோனகர்.கொம் மேற்கொண்ட மேலதிக கலந்துரையாடல் ஊடாக 9 வருட இழுபறியின் பின்னணியில் பலரது அலட்சியமும் பொறுப்பின்மையும் காரணமாக இருந்துள்ளதோடு பெண்கள் உரிமை விவகாரத்தில் நீண்ட இழுபறி நிலவியுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்திருந்தது.
எனினும், தற்சமயம் பெண்களும் காதி நீதிபதிகளாவதற்கும் அதேபோன்று பெண்கள் தமது திருமண பதவில் கையொப்பமிட வேண்டும் போன்ற நிபந்தனை உட்பட காதி நீதிபதியாவதற்கான ஆகக்குறைந்த தகைமையாக சட்டத்தரணியாக இருத்தல் மற்றும் பெண்களின் திருமண வயது 18 ஆகி விடயங்களும் உள்டக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment