யுத்த காலத்தில் கூட மக்கள் இவ்வளவு அச்சத்துடன் வாழவில்லை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Tuesday, 9 July 2019

யுத்த காலத்தில் கூட மக்கள் இவ்வளவு அச்சத்துடன் வாழவில்லை: மஹிந்த


ஆகாய மார்க்கமாக வந்து குண்டு வீசும் அளவுக்கு விடுதலைப்புலிகள் செயற்பட்டுக் கொண்டிருந்த தமது ஆட்சிக் காலத்தில் கூட மக்கள் இவ்வளவு அச்சத்துடன் வாழவில்லையென தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.



ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில், இனங்களுக்கிடையிலான பதற்றம் , அச்ச சூழலை உருவாக்குவதில் மஹிந்த அணியினர் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். இந்நிலையிலேயே மினுவங்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்ட-ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தீவிர பிரச்சாரங்கள் இடம்பெற்று வரும் அதேவேளை பலவீனமான ஐக்கிய தேசியக் கட்சி அரசு இந்நிலையைத் தணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தவறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment