பல்வேறு குற்றச்சாட்டுகளின் பின்னணியில் விசாரிக்கப்பட்டு வரும் குருநாகல் மருத்துவர் ஷாபியின் விளக்கமறியல் எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை மற்றும் தீவிரவாதிகளுடன் தொடர்பு என பல கோணத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் மருத்துவர் ஷாபி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லையாயினும் அவரை விடுவிப்பதன் ஊடாக ஏனைய முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு இடையூறுகள் ஏற்படும் என நீதிபதி கருதுவதன் பின்னணியில் பிணை மறுக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment