இலங்கை, புவியியல் ரீதியாக சிறந்த இடத்தில் அமையப்பெற்ற மிக அழகான நாடு. ஆனாலும் அதனால் முழுமையான பயனடைவது போதைப் பொருள் வர்த்தகர்களே என தெரிவிக்கிறார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
படித்த இளைஞர்கள், வர்த்தகர்கள் நாட்டைக் கைவிட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்ற நிலையே தொடர்வதாகவும் இதனூடாக நாட்டின் பயனை அனுபவிப்பதெல்லாம் போதைப் பொருள்ள வர்த்தகர்களாகவே இருப்பதாகவும் கரு விளக்கமளித்துள்ளார்.
ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தினாலேயே அபிவிருத்தியடைந்த நாடுகளாக மாறின. ஆயினும், இலங்கையை முன்னேற்றுவது பல வழிகளிலும் கடினமாகவே இருந்து கொண்டிருப்பதாகவும் பொருளாதார திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படும் பொறிமுறை இல்லாதிருப்பதாகவும் கம்பஹாவில் வைத்து கரு ஜயசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment