ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னராக மாகாண சபை தேர்தலே நடக்கும் என தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடாத்துவதற்கு முயற்சிக்கின்ற போதிலும், பெரும்பாலும் மாகாண சபை தேர்தலே முதலில் நடக்கும் என அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, மைத்ரிபால சிறிசேன உட்பட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கப் போவதாக ஆட்சியைப் பிடித்த எவருமே அதனை செய்யவில்லையெனவும் செய்வதற்கான சாத்தியமும் இல்லையெனவும் அமரவீர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment