முஸ்லிம் பெண்களின் திருமண வயது: எப்போதோ எடுத்த முடிவு: பௌசி! - sonakar.com

Post Top Ad

Friday, 12 July 2019

முஸ்லிம் பெண்களின் திருமண வயது: எப்போதோ எடுத்த முடிவு: பௌசி!



முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 18 என குறிப்பிடுவதற்கு முஸ்லிம் நாடளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இணக்கம் காணப்பட்டுள்ளமை குறித்து பைசர் முஸ்தபா தகவல் வெளியிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு மிலிந்த மொரகொடவினால் முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்தை மீளாய்வு செய்வதற்கென நியமிக்கப்பட்டிருந்த குழு இவ்விவகாரத்தில் கடந்த ஒன்பது வருடங்களாக இவ்விடயத்தில் முரண்பட்டு இரு அணிகளாக கருத்து முரண்பட்டிருந்தனர். இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்களுக்குள் இம்மாற்றம் நிகழ்ந்திருப்பதோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை முன் கூட்டியே அறிவித்திருந்தார்.



இந்நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பைத் தலைமை தாங்கிய சிரேஷ்ட அரசியல்வாதியான ஏ.எச்.எம் பௌசியை சோனகர்.கொம் இது தொடர்பில் தொடர்புகொண்டு வினவியிருந்ததுடன் இம்முடிவு நிர்ப்பந்தத்தின் பேரில் எடுக்கப்பட்டதா? என கேட்கப்பட்ட கேள்வியை மறுதலித்த அவர், இது ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரே காணப்பட்ட இணக்கப்பாடு என விபரித்திருந்தார்.

இது பற்றிய மேலதிக விளக்கங்களைத் தரக்கூடிய சோனகர்.கொம் நேரலை நிகழ்வொன்றில் நாளை சனிக்கிழமை ஏ.எச்.எம் பௌசி  கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment