அத்துராலியே ரதன தேரர் உண்ணாவிரதமிருந்து இறந்திருந்தாலும் அதைப் பற்றித் தான் கவலைப்பட்டிருக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்.
சமூக நலன் கருதியும் சூழ்நிலை கருதியுமே தாம் பதவியை துறந்ததாக அவர் விளக்கமளித்துள்ள அதேவேளை மீண்டும் தமக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டால் அது குறித்து பரிசீலிக்கவும் தயார் எனவும் முன்னாள் ஆளுனர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனக்கு சட்டவிரோதமாக எங்கிருந்தும் நிதி கிடைக்கவில்லையெனவும் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment