அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் அரச கரும மொழிகள் தினத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மொழி தொடர்பான முக்கியத்துவ விழிப்புணர்வு பாடசாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத்தின் வழிகாட்டலில் செயலக உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.எம்.ஆயிஷா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் மொழிகளின் முக்கியத்துவம் பற்றிய விளக்க கருத்துரைகள் என்பன வளவாளர்களாக கலந்து கொண்ட செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.நியாஸ், செயலக சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.ஸப்ரீ ஆகியோரால் வழங்கப்பட்டது.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment