லேன்ட் குரூசர் வாகனம் ஒன்றில் பயணித்த இருவர் கொஹுவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமுற்ற ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சையளிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து சிறிது காலம் அடங்கியிருந்த பாதாள உலக நடவடிக்கைகள் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment