சஜித் பிரேமதாசவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாராக வேண்டும் எனவும் அதனை தான் பிரதமருக்கு மிகத் தெளிவாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.
நாட்டை மீண்டும் நிலைப்படுத்தக் கூடிய தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவாலேயே தர முடியும் என தெரிவிக்கின்ற அவர், சஜித்தின் தலைமையில்லாத அரசியலை தன்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லையென தெரிவிக்கிறார்.
தொடர் தோல்வியில் துவ்ணடு போயிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டெறிந்து மாகாண சபை தேர்தலில் ஹரின் போட்டியிட்டு வென்றமையும் அதன் பின்னர் கட்சி உத்வேகம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment