ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அகில ஆஜர் - sonakar.com

Post Top Ad

Monday, 1 July 2019

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அகில ஆஜர்



பாடப்புத்தகங்களில் கல்வியமைச்சரின் படம் மற்றும் அறிக்கையை பிரசுரிக்கும் முகமாக பண விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு குறித்து இன்று விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.



விஜேதாச ராஜபக்சவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இம்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப்பின்னணியில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த அகில, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து தனது தரப்பினை நியாயப்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

No comments:

Post a Comment