முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறையிலிருக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 9ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்களைத் தவிர்க்கத் தவறியதன் பின்னணியில் இவ்விருவரும் சந்தேக நபர்களாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளின் போது அரசாங்கத்துக்கு முன் கூட்டியே தாக்குதல் பற்றிய உளவுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை புலனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment