தமக்கு சட்டவிரோதமாக கருத்தடை செய்யப்பட்டிருப்பதாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் முறையிட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கானோரில் ஒருவர் கூட இதுவரை கொழும்பு காசல் வீதி வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக வரவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
டி சொய்சா மற்றும் காசல் வீதி வைத்தியசாலைகளில் குறித்த பெண்களுக்கான பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதும் இதுவரை அவ்வாறு ஒருவரும் வரலில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்படுவதும் சிக்கலான விடயமாக மாறியுள்ளதோடு குருநாகல் மஜிஸ்திரேட் பக்கசார்பாக நடந்து கொள்வதாக நீதி சேவைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment