ஹலீமின் பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் வேலை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Thursday, 18 July 2019

ஹலீமின் பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் வேலை நிறுத்தம்


தபால் சேவை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினை நிறுத்துவதற் அமைச்சர் ஹலீம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதையடுத்து திட்டமிட்டபடி இன்று மாலை 4 மணி வரை தமது போராட்டம் தொடரும் என தெரிவிக்கிறது ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்கம்.


இதனையடுத்து சில தினங்களுக்குள் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ளப் போவதாகவும் குறித்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

சம்பள உயர்வு மற்றும் பணியாளர்கள் இணைப்பின் போதான நடைமுறைகள் தொடர்பிலான முறுகல்களுக்கு தகுந்த தீர்வினைக் கோரியே இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றமையும் அமைச்சர் ஹலீமின் பதவிக் காலத்தில் தாம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment