ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவே இல்லையென தகவல் வெளியிட்டுள்ளார் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி டி.ஐ.ஜி லத்தீப்.
இன்றைய தினம் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையின் போதே இத்தகவலை வெளியிட்ட அவர், ஏப்ரல் 09ம் திகதியளவில் இந்திய தூதரகம் மற்றும் தேவாலயங்கள் தாக்கப்படக் கூடும் என்ற தகவல் கிடைக்கப்பெற்றதாகவும் எனினும் இதன் போதான ஒருங்கிணைப்பு குறைபாடு இருந்ததாகவும் தகவல்கள் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாக்குதல்களைத் தவிர்த்திருக்க்க கூடிய அளவு போதுமான தகவல்கள் இருந்துள்ளதாகவும் எனினும் தாக்குதல் இடம்பெறும் வகை இதன் முக்கியத்துவம் உணரப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment