சுகாதார பரிசோதகர்கள் தமது கடமைகளை மேற்கொள்ள முடியாதவாறு மேல் மாகாண ஆளுனர் அழுத்தம் பிரயோகிப்பதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பியகம பகுதியில் பாவனைக்கு உதவாத பருப்பு, பயறு, கௌபி போன்ற தானியங்கள் ஆயிரக்கணக்கான கிலோ கிராம்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கடந்த 25ம் திகதி அங்கு பரிசோதனை நடாத்தப்பட்டதாகவும் அதன் பின்னணியில் ஆளுனர் தலையிட்டு சுகாதார பரிசோதகர்களை எச்சரிக்கும் வகையிலும் அழுத்தம் கொடுக்கும் வகையிலும் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னணியில் சிலர் பணியிலிருந்து விலகவும் முயற்சிப்பதாக குறித்த சங்கம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment