BBS கூட்டம்: பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு தரப்பிடம் வலியுறுத்து - sonakar.com

Post Top Ad

Sunday, 7 July 2019

BBS கூட்டம்: பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு தரப்பிடம் வலியுறுத்து


கண்டியில் இடம்பெறும் பொது பல சேனா கூட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற பிரச்சாரமே இடம்பெற்று வரும் நிலையில் பாதுகாப்பு படையினர் இது தொடர்பில் தீவிர கவனம் எடுத்து சட்ட - ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என வலியுறுத்தி பிராந்தியத்தின் பல்வேறு தரப்புகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளன.



கண்டி, அக்குரண, கட்டுகஸ்தொட்ட பகுதிகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள் , பிராந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் நேற்று வரை இவ்வாறான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதோடு பொலிஸ் உயர் மட்டம் பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலையில் கண்டி நகரம் அமைதியாகவே காணப்படுவதாகவும் பேராதெனிய உட்பட மிகச் சில இடங்களிலேயே கூட்டம் தொடர்பிலான பதாதைகள் காணப்படுவதாகவும் எமது கண்டி செய்தியாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment