இவ்வருடம் ஜூலை மாதம் 17 ஆம் திகதி புதன்கிழமை இன்ஷா அல்லாஹ் பகுதியளவு சந்திர கிரகணம் (Pயசவயைட டுரயெச நுஉடipளந) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிகழவிருக்கும் சந்திர கிரகணம் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவின் பின்னர், கொழும்பு (நேர வலையம் 5.5) நேரப்படி 17 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 12:13 மணி முதல் அதிகாலை 05:47 மணி வரை இலங்கையில் தென்படலாம் என அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவை மறைவதைக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)
எனவே கிரகணங்கள் ஏற்படும் போது வீண் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை கடைப்பிடித்து நடக்குமாறு நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்வதோடு கிரகணம் நிகழ்வதைக் காணும் போது கிரகணத் தொழுகையை நடாத்தும் படியும் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் பகுதி சார்ந்த ஆலிம்களை ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.
சந்திரனில் ஒரு பகுதி மறைவதை அல்லது சந்திரன் முழுமையாக மறைவதைக் காணும்போதுதான் சந்திர கிரகணத் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, ஏற்பட இருக்கும் சந்திர கிரகண நிகழ்வில் புதன்கிழமை அதிகாலை 01:31 மணி முதல் சந்திரனில் இருள் ஏற்பட ஆரம்பித்து அதிகாலை 04:29 மணியுடன் இருள் நீங்கிவிடும் என வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மேற்குறித்த நேர இடைவெளிக்குள்ளே சந்திரனில் மறைவு எற்பட வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம். அப்துல் வஹாப்
பிறைக் குழு இணைப்பாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments:
Post a Comment